இயற்கை முறையில் வாழை சாகுபடியில் வெற்றி பெற்ற காவல் துறை அதிகாரி திரு.சிவபாலன்.
பகுதிநேர இயற்கை விவசாயி
இடம் -தென்காசி மாவட்டம் சங்கரன் கோயிலில் உள்ள குருக்கள்பட்டி கிராமம்.
பயிரிட்ட பொருட்களின் விவரம்
வாழை ரகம்- கோழி கோடு
விவசாயம் செய்த முறை
வாழைக்கன்று நடுவதற்கு முன் 4 டிராக்டர் மாட்டு சாண தொழு உரங்களை நிலத்தில் இடப்பட்டது. வாழைக் கன்று நட்டு முடித்ததும் தரைவழியாக சூடோமோனாஸ் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கன்றுகள் வாரியாக மண்புழு உரங்கள் இடப்பட்டது. 15 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகாவியம் அல்லது மீன் அமிலம் தெளிக்கப்பட்டது. கடலைப்புண்ணாக்கு மற்றும் வேப்பம் புண்ணாக்கு அனைத்து கன்றுகளுக்கு கொடுக்கப்பட்டது. இதுவரை தோட்டத்திலுள்ள மட்டை புல் பூண்டுகளை எரித்து கிடைத்த சாம்பல் ஒவ்வொரு கன்றுக்கும் 2 கைப்பிடி அளவு கொடுக்கப்பட்டது. ஒரு முறை பாஸ்போபாக்டீரியா தரைவழியாக கொடுக்கப்பட்டது. காயகல்பம் கரைசல் 1000 லிட்டர் தயாரித்து ஒரு லிட்டர் வீதமாக ஒவ்வொரு கன்றுக்கும் கொடுக்கப்பட்டது. வாழை தார்கள் வைத்தவுடன் காய்கள் நனையும்படி முன்னும் பின்னும் பஞ்சகாவியம் தெளிப்பான் மூலமாக நன்றாக நனையும்படி தெளிக்கப்பட்டது.
நோய் தாக்குதல் கட்டுப்படுத்திய முறை
ஆரம்ப காலத்தில் இலைகளில் புழுக்கள் இருந்தன அதை கட்டுப்படுத்த நீர் மேலாண்மை குழுவின் ஆலோசனையின்படி பேசில்லஸ் சஸ்டில்லஸ்,பேசில்லஸ் மைசிஸ் பயன்படுத்தி அதன் மூலமாக புழுக்களை முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. ஆலங்கட்டி மழை மற்றும் புயல் காற்று காரணங்களால் வாழையின் தடைகள் உரிந்து அம்மை தழும்பு நோய் ஏற்பட்டது. நீர் மேலாண்மை குழுவில் பிரிட்டோ ராஜ் அவரின் ஆலோசனையை பின்பற்றி இந்த நோய்களை சிறந்த இயற்கை முறையில் சரி செய்யப்பட்டது.
வாழை மகசூல் விவரம்
ஒரு வாழைத் தாரில் 8 சீப்பு முதல் 14 சீப்புகள் வரை நல்ல மகசூலாக கிடைத்தது. ஒரு தாருக்கு 360 முதல் 400 ரூபாய் செலவு போக லாபமாக கிடைத்தது.
உதவிய கரங்கள்
நம்மாழ்வார் அவர்களின் மூலமாக இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு விவசாயத்தில் ஈடுபட்டார். பசுமை விகடன் வெளிவந்த வெற்றியாளர்களின் உந்துதலால் இயற்கை விவசாயத்தின் ஆர்வம் ஏற்பட்டது.மேலைநல்லூர் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையில் இருந்து சிறந்த ஆலோசனைகள் கொடுக்கப்பட்டது. திரு.லஷ்மி காந்தன் என்பவர் நீர் மேலாண்மை குழுவில் இணைத்து இயற்கை விவசாய ஆலோசனைகளை பிரிட்டோ ராஜ் அவர்களின் மூலமாக பலமுறை பெறப்பட்டது.
வெற்றியாளர் அறிவுரைகள்
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பொறுமை மற்றும் இயற்கை விவசாயத்தில் நல்ல ஆர்வத்துடன் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நம் கடமையாக நஞ்சு இல்லாத உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து கொடுப்பது நம்மைப் போன்ற விவசாயிகளின் கடமையாகும்.
தொடர்பு கொள்ள
திரு.R.சிவபாலன் M.A
காவல் துறை அதிகாரி
கைபேசி எண் : 9498193985
YouTubeVideo Link: