திராட்சை உரம்

 திராட்சை உரம் தயாரிக்கும் முறை


தேவையான பொருட்கள்

1. தோல்கள் நீக்கிய கருப்பு திராட்சை -5 கிலோ

2. நாட்டுச்சக்கரை அல்லது கருப்பட்டி- 5 கிலோ

3. மூடி அமைப்புடைய பாத்திரம் / டிரம்

 

செய்யும் முறை

ஒரு சுத்தமான மூடியுள்ள பாத்திரத்தில் தோல் நீக்கப்பட்ட கருப்பு திராட்சையுடன் சம அளவு  நாட்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை தூளாக்கி, இரண்டையும் நன்றாக பிசைந்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலக்கி காற்று புகாதாவாறு இறுக்கமாக மூடி விட வேண்டும்.  பின்பு அந்தப் பாத்திரத்தை நிழல் பகுதியில்பூமிக்குள்  குழிதோண்டி உள்ளே வைத்து மண் போட்டு மூடி குறைந்தபட்சம் 18 நாட்கள் இருக்குமாறு வைக்கலாம்.

பூமிக்குள் வைக்க இயலாதெனில் நிழலான இடத்தில், வெப்பம் தாக்காத வகையில் வைக்கலாம். 18 நாட்களுக்கு இடையில் திறக்க வேண்டாம்.

18 நாட்கள் ஆன பின்பு மூடியை திறந்து அதிலுள்ள ரசத்தை கொட்டைகள் நீங்குமாறு வடித்து வைத்துக் கொள்ளலாம். இத் திராட்சைப்பழ கரைசல் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.


பயன்படுத்தும் முறை

மா, வாழை, கொய்யா, பப்பாளி போன்ற  அனைத்து வகை தோட்டக்கலை பழங்களுக்கும்,பழங்கள் பறிக்கும் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு முன்பு இந்த கலவையினை 10 லிட்டருக்கு 100 மில்லி என கலந்து தெளிக்கலாம். பழங்களின் மேல் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

பயன்பாடுகள்

இக்கரைசலை பயன்படுத்துவதன் மூலம் கரைசலில் உள்ள பொட்டாசியம் சத்து பழங்களில் நல்ல நிறத்தையும், பளபளப்பான வெளித்தோற்றத்தை கொடுக்கவும் பயன்படும்.


FAQ's

எந்த பருவத்தில் தெளிக்க வேண்டும்?

கொய்யா, பப்பாளி போன்ற பழ மரப் பயிர்களில் அறுவடைக்கு 7 நாட்களுக்கு முன்பாக தெளிக்கும் போது, பளபளப்பான நிறம் கிடைக்கும். பொட்டாசியம் சத்து நேரடியாக கிடைப்பதால் பழங்களின் வெளிப்புற தோற்றம் மற்றும் சுவை கூடுகிறது.