EM கரைசல் தயாரித்தல்

 EM கரைசல் செய்யும்  2 முறைகள்

1. பழங்களைக் கொண்டு தயாரித்தல்

2. EM 1 தாய் திரவம் கொண்டு தயாரித்தல்

பழங்களை கொண்டு தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

1.  வாழைப்பழம் (நன்றாக கனிந்தது) -  3 கிலோ

2.  பப்பாளி பழம் (நன்றாக கனிந்தது) -  3 கிலோ

3. மஞ்சள் பூசணி (நன்றாக பழுத்தது)- 3 கிலோ

4. நாட்டு வெல்லம் அல்லது நாட்டுச்சக்கரை அல்லது கருப்பட்டி  - 3 கிலோ

5. தண்ணீர்  -13 லிட்டர்

தயாரிக்கும் முறை

மேலே குறிப்பிட்ட மூன்று பழங்களையும் தோலை நீக்கி நன்றாக சிறிது சிறிதாக நறுக்கி நன்றாக கூழ் மாதிரி பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். 13 லிட்டர் தண்ணீருடன் நாட்டுச் சர்க்கரையை கரைத்து பிசையப்பட்ட பழங்களை தண்ணீருடன் நன்றாக கலந்து மூடியுடன் கொண்ட கேன் ஒன்றில் இவைகளை சேகரித்து 25 நாட்கள் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். 5 நாட்களுக்கு ஒரு முறை மூடியை திறந்து மூடவேண்டும் இதுபோல் 5 அல்லது 6 முறை செய்ய வேண்டும். 26 நாளில் இருந்து EM கரைசலை பயன்படுத்த தொடங்கலாம்.

பயன்படுத்தும் முறை

தரைவழி பாசனத்திற்கு 1 ஏக்கருக்கு 1 1/2 லிட்டர் விதத்தில் தண்ணீரில் கலந்து விடலாம்

தெளிப்பதற்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 750 மில்லி விதத்தில் கலந்து தெளிக்கலாம்.



EM 1 தாய் திரவம் கொண்டு தயாரித்தல்


தேவையான பொருட்கள்

1. EM 1 தாய் திரவம் ஒரு லிட்டர்

2. நாட்டு வெல்லம், நாட்டுச்சக்கரை அல்லது கருப்பட்டி 3 கிலோ

3. தண்ணீர் 17 லிட்டர்.

தயாரிக்கும் முறை

17 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ நாட்டுச் சர்க்கரையை கரைத்து 1 லிட்டர் தாய் திரவத்தை சேர்த்து நன்றாக கலக்கி மூடியுடன் கொண்ட தண்ணீர் கேனில் எட்டு நாள் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்து மூடியை ஐந்து நாட்களுக்கு ஒரு முறை திறக்கவேண்டும். 8 நாட்கள் கழித்து இந்தக் கரைசலை பயன்படுத்தத் தொடங்கலாம்.

பயன்படுத்தும் முறை

தரைவழி பாசனத்திற்கு 1 ஏக்கருக்கு 1/2 லிட்டர் விகித்தில் தண்ணீரில் கலந்து விடலாம்

தெளிப்பதற்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி விதத்தில் கலந்து தெளிக்கலாம்.

இந்த கரைசலை அனைத்து வகையான பயிர் மற்றும் காய்கறி பழங்கள் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

செய்முறை விளக்க YouTube Video Link : 



https://youtu.be/s7AJ6nXRY04

https://youtu.be/V-EL7wERCYo