தேமோர் கரைசல்

தேமோர் கரைசல் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தும் முறைகள்

தேவையான பொருட்கள் (ஒரு ஏக்கர் 10 லிட்டர் தெளிப்பதற்காக)

1. 5 லிட்டர் நன்றாகப் புளித்த வெண்ணெய் நீக்கிய மோர்

2. 2 லிட்டர் தேங்காய் பால்

தயாரிக்கும் முறை

வெண்ணெய் நீக்கிய மோர் 5லிட்டர் எடுத்து 4 - 5 நாட்கள் மூடி கொண்ட பாத்திரத்தில் நன்றாக புளிக்க வைக்க வேண்டும். மண்பானையாக இருந்தால் நல்ல புளிப்புத் தன்மை கிடைக்கும். 

5 ஆம் நாள் 2 அல்லது 3 தேங்காயில் இருந்து எடுத்த இரண்டு லிட்டர் தேங்காய்ப் பாலை மோருடன் சேர்த்து 2 -3 நாட்கள் மீண்டும் நன்கு புளிக்க வைக்க வேண்டும். மழை நீர்  மற்றும்  வெயில் படாதவாறு நிழலில் வைக்க வேண்டும். தொழு உரக் குழியில் தேமோர்க் கரைசல் செய்யும் மண் பானையை புதைத்து வைக்கும் பொழுது நன்கு நோதிக்க வாய்ப்பாக அமைகிறது.  (தொழு உரக் குழி இல்லையெனில் நிழலில் வைக்கலாம்.)

7-8 ஆம் வந்து நாட்களிலிருந்து இந்தக் கரைசலை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

பயன்படுத்தும் முறை

இந்தக் கரைசலை கண்டிப்பாக இரண்டு முறை பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

முதல் முறை (8 வது நாள் கரைசலில்)10 லிட்டர்க்கு 500 மி.லி என்ற விகிதத்தில் பூக்கள் பூப்பதற்கு முன்பருவத்தில் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் அதிகமாக ஏற்படுவதற்கும் பூக்களை நிலைநிறுத்துவதற்கும் இது உறுதுணையாக இருக்கும்.

இரண்டாவது முறை (16வது நாள் மறுபடியும் தயார் செய்த கரைசல்) முதன்முறை தெளித்து பின் 8 நாள் அல்லது பத்தாவது நாட்களுக்குள் பூக்கள் மீது நேரடியாக படாமல் தெளிப்பானில் வாய் மேல் நோக்கி வைத்து மழைத்தூறல்  போலதெளிக்க வேண்டும்.

 பயன்கள்

கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற அனைத்து காய்கறிப் பயிர்களுக்கும், கொய்யா, மா, சப்போட்டா , நெல்லி உட்பட தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பூக்கும் முன்பும் பூத்த பின்பும் தெளிக்கலாம். 

பூப்பயிர்களுக்கு அரப்பு மோர்க் கரைசல் நல்ல பலன்கள் தரும். 

வடிகட்டி புழுக்களை நீக்கிவிட்டு தேமார் கரைசல் தயாரிக்க பயன்படுத்தலாம். 


தேமோர் கரைசல் தயாரிக்க தயிரை புளிக்க செய்தேன் 6 நாள் கழித்து அதில் புழு இருக்கிறது அதை கொண்டு தேமோர் கரைசல் தயாரிக்கலாமா?

புழுக்களை வடிகட்டி பின் பயன்படுத்தலாம். 

மோராக மாற்றி புளிக்க வைக்க வேண்டும். 

இறுக்கமாக மூடாமல் இருக்கும் போது கொசு ஈக்கள் உள்ளே சென்று முட்டையிட வாய்ப்பாக அமைகிறது. 

தேமோர் கரைசல் தயாரிக்கப் பயன்படுத்தும் பாத்திரம் சுத்தமாகவும், கலக்கப் பயன்படுத்தும் கரண்டி குச்சி சுத்தமாகவும் இருக்க வேண்டும். காற்று புகாமல் இறுக்கமாக மூடியிருக்க வேண்டும்