மழை நீரை கிணற்றுக்குள் சேமிக்கும் பெண்மணி

 நீர் மேலாண்மையில் சாதித்த பெண் விவசாயி ஜெயலஷ்மி

வெற்றியாளரின் விவரம்

திருமதி. ஜெயலக்ஷ்மி

இடம்:

சிவகங்கை மாவட்டம் பனையூர் கிராமம்

மழை நீரை கிணற்றுக்குள் சேமிக்கும் நீர் மேலாண்மை முறை

செயல்முறைப்படுத்திய விளக்கம்

கிணற்றிலிருந்து 12 அடி தொலைவில் 6 அடி அகலம் 6 அடி நீளம் 6 அடி ஆழம் ஒரு குழி அமைக்கபட்டு பக்கவாட்டில் நான்கு பக்க சுவர்களுக்கு குண்டுகள் கற்களைக் கொண்டு சுவர் மாதிரியாக அடிக்கப்பட்டு மேலே உள்ள இரண்டு அடுக்குகளில் உள்ள கற்களை சிமெண்ட் கொண்டு மண் அரிப்பைத் தடுப்பதற்காக பூசப்பட்டது. குழியில் அரை அடிக்கு முக்கால் இன்ச் கற்களை நிரப்பப்பட்டு 3 inch பைப் 12mm அளவுக்கு மேல் பகுதியில் துளையிடப்பட்ட பைப்பைக் கொண்டு படுக்க வாட்டில் வைக்கப்பட்டது. கிணற்றிலிருந்து 13 அடி துளை இடாத பைப்பை அதனுடன் இணைக்கப்பட்டு 6 அடி பைப்பை 12mm அளவுக்கு துளையிடப்பட்ட பைப்பை இதனுடன் இணைத்து நிற்க வைக்கப்பட்டு துளையிடப்பட்ட பழுப்புகளை வலைகளை கொண்டு சுற்றி கட்டு கம்பி கொண்டு கட்டப்பட்டது. நிற்க வைக்க பட்ட பைப்பின் முனையை end கேப்பை கொண்டு மூடப்பட்டது. பைப்பின் மேலாக சிறு ஜல்லிகளை கொண்டு மேலே நிரப்பப்பட்டு சிறு ஜல்லிகளை மேலே முக்கால் இன்ச் கற்களைக் கொண்டு குழிகள் முழுவதுமாக நிரப்பப்பட்டது. வாய்க்காலில் இருந்து இரண்டு சிறு பைப்புகளை கொண்டு மழை நீர் சேமிக்கும் தொட்டியுடன் இணைக்கப்பட்டது.

மழைநீர் சேமிப்பு முறையால் ஏற்படும் பயன்கள்

வாய்க்காலில் மழைக்காலங்களில் சேகரிக்கப்படும் நீரில் வாய்க்கால் வழியாக நீர் சேமிப்பு இடத்திற்கு வந்தடைகிறது இங்கு நீரை நேரடியாக சேமிப்பிலிருந்து கிணற்றுக்கு மழைநீர் வந்தடைகிறது. இதனால் கிடைக்கும் சிறிய மழையால் கிடைக்கும் நீரை சிறப்பாக கிணற்றில் சேமிக்க முடிகிறது.

உதவிய கரங்கள்

மழைநீர் சேமிப்பு குழியை அமைப்பதற்கு நீர் மேலாண்மை குழுவில் உள்ள பிரிட்டோ ராஜ் அவர்களின் முழு ஆலோசனை பெறப்பட்டு அதன்படி அமைக்கப்பட்டது.

திருமதி. ஜெயலஷ்மி அவர்களின் ஆலோசனை

இது மாதிரி மழைநீர் சேமிப்பு குழிகளை கிணற்றின் மேல் அமைப்பதன் மூலம் நமக்கு கிணற்றில் உபரி நீர்கள் நேரடியாக சேமிக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தபடுகிறது.

தொடர்பு கொள்ள

திரு.ஜெயலக்ஷ்மி

பனையூர்

8248857578

முழு விபரங்களையும் வீடியோவில் காணலாம் 

YouTube Video Direct Link : 

https://youtu.be/SgkjyAC1mOA