நீரோட்டம் பார்க்க வேண்டுமா?

நீரோட்டம் பார்ப்பது குறித்த பொதுவான விளக்கம்:

 வேப்பங்குச்சி, இரும்பு குண்டு, குடத்தில் தண்ணீர் ,இரும்பு கம்பிகள், சங்கிலி போன்ற பல்வேறு வகையான உபகரணங்களை பயன்படுத்தி மனிதர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை ஆய்வு செய்வது நமது பண்டைய வழக்கம். இவ்வாறான செயல்பாடுகளை மனிதர்கள் செய்யும் போது அறிவியல் பூர்வமாக மனிதர்களை ஆய்வு செய்ததில் அவர்களால் 300 அடி ஆழம் வரை உள்ள இடத்தில் மட்டுமே முறையாக நீர் இருப்பதை ஆய்வு செய்து சொல்ல இயலும். அதற்கு மேல் அவர்களால் சொல்ல இயலாது .அப்படி சொல்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய அனுபவம் மற்றும் பொதுவாக சொல்லும் விஷயம் ஆகும். இவ்வாறு பொதுவாக சொல்லும் அளவுகளில் பெரும்பாலும் தவறுகள் நடக்க வாய்ப்புண்டு.

 எனவே ஒரு விவசாயத்திற்காக நிலத்தடி நீர்மட்டத்தை ஆய்வு செய்யும்போது ஒரு முறையாவது பாசனம் தொடர்புடைய அரசு அலுவலகங்கள் ஆன வேளாண்மை பொறியியல் துறை, குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணி துறை போன்ற துறைகளை தொடர்பு கொண்டு மின் எதிர்ப்பு முறை மூலம் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வது நம் நிலத்தடியில் உள்ள மண் மற்றும் பாறை அடுக்குகள் குறித்த உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ள இயலும். இத்துறைகளில் மாவட்ட தலைமை அலுவலகங்களில் இவ்வாறு பார்க்கும் நிலத்தடிநீர் ஆய்வாளர்கள் இருப்பார்கள். அலுவலகங்களில் குறைந்த செலவில் பணத்தை செலுத்தி ஆய்வுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதியலாம்.

 வேளாண்மை பொறியியல் துறையில் மாவட்ட அளவில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் ஒரு இடத்தில் பாயிண்ட் பார்க்க ரூபாய் 500, பொதுப்பணித் துறையின் மூலம் பார்ப்பதற்கு ஒரு பாயிண்ட்க்கு ரூ 1000, குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பார்ப்பதற்கு ஒரு பாயிண்ட் க்கு ரூபாய் 2500 அலுவலகங்களில் கட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகள் இத்துறைகள் தொடர்புகொண்டு நிலத்தடி நீரை ஆய்வு செய்து அதன் மூலம் அவர்கள் தரும் அறிக்கைகளை கையில் வைத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு பார்க்கப்படும் என சொல்லப்படும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தங்கள் பகுதியில் வெற்றிகரமாக பார்க்கும் 2 நிலத்தடி நீர் ஆய்வாளர்கள் உடன் பொதுவாக ஆய்வு செய்து நிலத்தடி நீர் உள்ள இடங்களை முடிவு செய்யலாம். இவ்வாறு செய்வது தோல்விகளை குறைக்கும் 

பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்