தமிழகமெங்கும் அனைத்து வகை தோட்டக்கலை பயிர்களிலும் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பழ மரங்களிலும் வரட்சியின் தாக்கத்தால் பாசனம் கொடுக்க இயலாத நிலை உள்ளது. இந்த பருவகால மாற்றத்தினை பயன்படுத்திக்கொண்டு நீரை எதிர்பார்த்து தண்டுதுளைப்பான் எனப்படும் புழுக்கள் அனைத்து வகை மரப்பட்டைகள் வழி உள்நுழைந்து மர தண்டை ஓட்டை போட்டு விடுகிறது. முதலில் மரத்தின் கிளைகளை செயலற்று போக வைக்கிறது. தண்டின் நடுப்பகுதியை குறுக்கு வாக்கில் துளை இடுவதால் கிளைகளுக்கு செல்லவேண்டிய தண்ணீரும் சத்தும் இல்லாமல் போவதால் கிளைகள் ஆரம்பத்தில் காய்கிறது. இதன் செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கும்போது இப் புழுவின் தாக்குதலால் மரமே பட்டு போகும் நிலை உள்ளது. எனவே அதிக வயதுள்ள பெரிய மரங்களை இந்த தண்டு துளைப்பான் புழு மற்றும் பூச்சிகளிடம் இருந்து காப்பது தற்போதைய முக்கியமான தேவையாகும்.
இதனை கட்டுப்படுத்த முடிந்தவரை காய்ந்த கிளைகளின் கீழுள்ள ஓட்டைகளில் கூறிய கம்பி வைத்து நோண்டி பார்த்தால் உள்ள புழுவினை பிடித்து அகற்றிவிட முடியும். பின்பு 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம் 50 மில்லி பவேரியா பேசியானா என்ற இரண்டு இயற்கைவழி திரவங்களை கலந்து மரங்களின் தண்டு மற்றும் கிளை பகுதிகளில் நனையுமாறு தெளிக்கலாம் .ஒருமுறை தெளித்தால் எட்டு அல்லது பத்து நாட்கள் கழித்து இரண்டாம் முறை தெளிப்பது நல்லது.
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்