தொழு உரம்


செடிகளில் ஊட்டச் சத்துகள் பரவும் விதம்
பேரூட்டச் சத்துக்களை தழை, மணி சாம்பல் சத்துகள் வேகமாக பரவி பயிரின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கிடைக்கும். ஆனால் சத்துப்பற்றாக்குறை ஏற்படும் பொழுது அடி இலைகளில் முதலில் பாதிப்பு ஏற்படும். பற்றாக்குறை அதிகம் ஆகும்பொழுதுதான் மேல்உள்ள இலைகளிலும் பாதிப்பு அறிகுறிகளைக் காணலாம். 
மெக்னிசியம், துத்தநாகம், மாங்கனிசு, கந்தகம், மாலிப்டினம், இரும்ப, தாமிரம் போன்ற சத்துகள் குறைந்த வேகத்தில் பரவும். இவை பற்றாக்குறை ஆரம்பிக்கும்போது அறிகுறிகள் இளம் இலைகளில் காணலாம். சுண்ணாம்புச்சத்து, போரான் போன்ற சத்துகள் மிகக் குறைந்த வேகத்தில் நகர்வதால் இதன் பற்றாக்குறை அறிகுறிகளை நுனி இலைகளிலும், மொட்டுக்களிலும் காணலாம். 

சத்து பற்றாக்குறையை சரி செய்ய இயற்கை உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களை அடியுரமாக கொடுத்து நிவர்த்தி செய்யலாம்.

100 கிலோ தொழுவுரத்தில் உள்ள சத்துக்கள் 
• தழைச்சத்து - 1 சதவீதம்
• மணிச்சத்து - 0.5 சதவீதம்
• சாம்பல் சத்து - 1 சதவீதம்
• சுண்ணாம்பு சத்து - 3 சதவீதம்
• மெக்னீசியம் - 0.5 சதவீதம்
• கந்தகம் - 0.5 சதவீதம் 

பயிருக்கு தேவையான சத்துக்கள் மொத்தம் 16
பேரூட்ட சத்துக்கள் - தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து இந்த வகை சத்துக்களை பயிருக்கு அதிகமாக பயன்படுத்துவதால் பேரூட்ட சத்து என்கிறோம். 
நுண்ணூட்ட சத்துக்கள் - இந்த வகை சத்துக்கள் வாயு நிலைகளிலும் காற்றிலிருந்தும் கிடைக்கும். கார்பன். ஹைட்ரஜன். ஆக்சிஜன் இவை கொழுப்புச்சத்துக்கள். காற்றிலிருந்து பயிருக்கு கிடைக்கிறது. சுண்ணாம்பு. மெக்னீசியம். இரும்பு போன்றவை மண்ணிலிருந்து கிடைக்க கூடிய திட வடிவ சத்துக்கள் ஆகும்.

காய்கறிகளுக்கு நுண்ணூட்ட சத்து போடுவதால் சுவை. மணம் அதிகம் இருக்கும்.

சத்துக்களின் ராஜா என்று சுண்ணாம்புச் சத்து அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அனைத்து வகையான சத்துக்களையும் பிரித்து பயிருக்கு அனுப்புவதால் சுண்ணாம்புச்சத்திற்கு இந்த பெயர் கூறப்படுகிறது..

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழுமம்
9944450552