இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி (105 நாட்கள்)

 இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி (105 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை

அடியுரம்

அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 2 கிலோ சூடோமோனஸ், 75 கிலோ சாம்பல் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு கொடுப்பது நல்லது

விதை நேர்த்தி செய்யும் முறை

நிலக்கடலை விதையினை முதலில் ஒரு வெள்ளைநிற தாளில் அல்லது துணியில் பரப்பி காய்ந்துபோன, சுருங்கிப்போன, பழுப்பு நிறமான விதைகளை பொறுக்கி நீக்கிவிடலாம். மீதமுள்ள நல்ல விதைகளை தேவையான தண்ணீரில் கலந்து நன்கு பிரட்டி அதன் மேல் படிந்துள்ள அழுக்குகள் போகுமாறு பொறுமையாக மெதுவாக கழுவி தண்ணீரை அகற்றிவிடலாம்.


 இவ்வாறான தண்ணீர் நீக்கப்பட்ட ஈரமான விதைகள் மீது ஒரு கிலோவிற்கு திரவம் என்றால் 7 மில்லி அல்லது பவுடர் என்றால் 10 கிராம் அளவுள்ள சூடோமோனாஸ் உடன் பவுடராக உள்ள 100 கிராம் அளவுள்ள அசோஸ்பைரில்லம் அல்லது 100 கிராம் அளவுள்ள ரைசோபியம் தூளினை மேலே ஊற்றி புரட்டிவிடலாம் . அனைத்து விதைகள் மீதும் இவ்விரண்டு உயிர் சம்பந்தப்பட்ட விதைநேர்த்தி பொருட்கள் பரவி அதன் மீது முழுமையான படலமாக வருமாறு செய்து அதனுடன் ஒட்டு திரவமாக தேவையான அளவு வடிகஞ்சி ஊற்றி புரட்டிவிடலாம்.


 இவ்வாறான விரட்டப்பட்ட நிலக்கடலை விதைகளை நிழலில் உலர்த்தி ஒட்டியிருக்கும் விதைகளை பிரித்து தனித்தனி விதைகளாக காய வைக்கலாம். இவ்வாறாக காயவைத்த விதைகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.


 நிலக்கடலையின் தோலுரிந்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

 அடிப்புறம் வளைந்த பாத்திரத்தில் பொதுவாக விதைநேர்த்தி பண்ணும்போது முறையான நன்மை கிடைக்கும்.


வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை


3 மூன்றாம் நாள்

உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம்.


5 ம் நாள் &

நடவு செய்த 12 ம் நாள்

E.M 100 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் அரை லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும்.


 நடவு செய்த 12 ம் நாள்

பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம்.


 நடவு செய்த 17 ம் நாள்

ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும்.


 20ம் நாள் 

மீன் அமிலம் 60 ml per 10 liter tank spray செய்யவும் .மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும்.


 25ம் நாள் 

கற்பூர கரைசல்  spray செய்யவும் .


 30ம் நாள் 

பஞ்சகாவிய  200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம்.


33 மூன்றாம் நாள் 

ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் /வேம் தரைவழி கொடுக்கலாம்.


 38 ம் நாள் 

கற்பூர கரைசல்  spray செய்யவும் 


 40ம் நாள்

E.M 300 ml per 10 liter tank spray செய்யவும்


 45ம் நாள் 

மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் கொடுக்கலாம்.


 50ம் நாள் 

ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும்.


 55ம் நாள்

கற்பூர கரைசல்  spray செய்யவும் 


 60ம் நாள் 

பஞ்சகாவியா  250 ml per 10 liter tank spray செய்யவும். அல்லது பத்து லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம்.


70ம் நாள் 

மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும. மாலையில் ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 லிட்டர் தரைவழி தரவும்.


85ம் நாள் 

கற்பூர கரைசல்  spray செய்யவும் .


90ம் நாள் 

பஞ்சகாவிய  200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம்.


ஒவொரு முறை நீர் பாய்ச்சும் போதும் அமிர்தக்கரைசல் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர்,  ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர், மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர்,  WDC ஒரு ஏக்கருக்கு 25 லிட்டர் என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்.. 


இயலுமானால்  நிலக்கடலை சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரம் செய்து 40 to 45 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு..  களை கட்டுப்படும். 



38-46 ஆவது நாட்களுக்குள் பூக்கள் பூக்கும் சமயத்தில் பிளாஸ்டிக் டிரம் கொண்டு உருட்டும் பொழுது அதிகமான பூக்கள் உருவாக வாய்ப்பாக அமைகிறது.  ( கூடுதல் விளக்கங்கள்  வீடியோவில் உள்ளது)

https://youtu.be/VADJ1BwORkg


நிலக்கடலை பயிர் பாதுகாப்பு குறித்த விடியோ

https://youtu.be/Wowwub6xHvk