மிளகு சாகுபடி

மிளகு பயிரில் இயற்கை விவசாயத்தின் மூலம் அதிக லாபம் பெற கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்:


1) ஒவ்வொரு மிளகுத்தூரிலும் குறைந்தபட்சம் ஒரு கிலோ


வில் இருந்து மூன்று கிலோ அளவில் ஊட்டமேற்றிய தொழு உரத்தை சிறிது மண்ணைத் தோண்டி உள்ளே இட்டு மூடி வைக்கலாம்.


2) ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்சம் ஒரு கைப்பிடி அல்லது 50 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பு தூள் செடியின் அடி புறத்திலிருந்து இரண்டடி தள்ளி தோண்டி உள்ளே வைத்து மூடலாம். இது பயிரின் வளர்ச்சிக்கும் வேரழுகல் தவிர்க்கவும் தேவைப்படும்.


3) ஒவ்வொரு செடிக்கும் குறைந்தபட்சம் 50 கிராம் அளவிற்கு மாதம் ஒருமுறை செங்கல் சூளை சாம்பல் அல்லது மரத்தினை எரித்த சாம்பலை வேர்ப்பகுதியில் இட்டு மூடி வைக்கலாம்.


பாசன நீர் தரைவழி கொடுக்க வாய்ப்பு இருக்கும்போது 200 லிட்டர் தண்ணீருக்கு 4 லிட்டர் மீன் அமிலம் கலந்து ஒவ்வொரு பயிருக்கும் ஒரு லிட்டர் வேர்ப்பகுதியில் ஊற்றி விடுவது நல்ல பலன் தரும்.


தென்மேற்கு பருவமழை அல்லது வெப்பசலனம் மழையால் ஈரம் கிடைக்கும்போது இப்பணிகளை விரைந்து செய்வது நல்ல பலன் தரும்.







4) தற்போது இலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலுமான வறண்ட வானிலையே கணக்கில் கொண்டு பழ ஈ தாக்கத்தினை தவிர்க்கும் பொருட்டு வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி கலந்து தெளிப்பது அல்லது பத்து லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி மெட்டாரைசியம் கலந்து தெளிப்பது நல்லது.


5) சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கத்தை தவிர்க்க 10 லிட்டர் தண்ணீருடன் 75 மில்லி வெர்ட்டிசீலியும் லக்கானி கலந்து தெளிப்பது நல்லது.

மேற்கண்ட 2 கரைசல்களையும் ஒரே தடவையாக கலந்து கொடுக்கலாம்.


பிரிட்டோராஜ் 

வேளாண் பொறியாளர்