வெற்றிலை சாகுபடி இடுபொருள்

இயற்கை முறையில் வெற்றிலை சாகுபடிக்கு மாதவாரியாக கொடுக்க வேண்டிய இடுபொருள் விவரம்:
1வது நாள் : ஒரு ஏக்கருக்கு 1 லிட் சூடோமோனஸ் தரைவழி தண்ணீர் வழி தரவும்.


2 வது நாள்: ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும்.


7 வது நாள்: ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் எருக்கு கரைசல் + சுண்ணாம்பு கரைசல் தரைவழி தரவும்.


9 வது நாள் : ஒரு ஏக்கருக்கு 2 லிட் மீன் அமிலம் பாசனத்துடன் தரவும்.


16 வது நாள்: ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும்.


20 வது நாள் : 10 லிட் தண்ணீருக்கு 50 மில்லி வெர்டிசீலியும் லக்கானி +50 மில்லி பேவேரியா பேசியானா

கலந்து தெளிக்கலாம்.23 வது நாள்: ஒரு ஏக்கருக்கு 2 லிட் இ. எம் கரைசல் பாசனம் வழி தரவும்.


25 வது நாள்: ஒரு ஏக்கருக்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3 லிட் அல்லது கோமியம் 200 ml வீதம் தரைவழி தரவும்.


மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு உத்தேச அட்டவணை. உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப இதனை மாற்றி கொள்ளவும்.


பிரிட்டோ ராஜ் 

வேளாண் பொறியாளர்