பனம்பழக் கரைசல்

பனம்பழக் கரைசல் அடர்த்தி அதிகமாக இருக்கும் என்பதால், இதனுடன் அதிகளவு தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லிட்டர் பனம்பழக் கரைசல் தேவைப்படும். கேன் அல்லது தொட்டியில் 10 பனம் பழங்களைப் போட்டு, அதனுடன் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து, தொட்டியின் மேல் பகுதியை பனை ஓலையால் மூடி விட வேண்டும். 4-ம் நாளில் அது நன்கு ஊறி அழுக ஆரம்பிக்கும். 5-ம் நாள் இரண்டு குடம் மாட்டுச் சிறுநீரை இந்தக் கலவையில் ஊற்றி கலக்கி விடவேண்டும்.
7-ம் நாளில் இருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்தக் கலவையை நன்றாகக் கலக்கி வர வேண்டும். 21-ம் நாளில் நுண்ணுயிரிகள் அதிகளவில் உருவாகி நுரைக்க ஆரம்பித்து விடும். அதற்கு மேல் இதைப் பயன்படுத்தலாம். 150 லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் வேப்பெண்ணெய், ஒரு லிட்டர் பனம்பழக் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம். 

இதை
6 மாதங்களுக்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்தலாம். இக்கரைசலில் நாட்கள் கூடக்கூட வீரியம் அதிகரிக்கிறது''