மலைப்பகுதி மற்றும் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் மிகப்பெரும் சவாலாக இருப்பது காட்டு விலங்குகளின் பாதிப்புகளேயாகும். காட்டு மாடுகள், எருமைகள், காட்டுப்பன்றிகள் உட்பட விவசாய விளை பொருட்களை சேதப்படுத்துவதுடன் சில சமயங்களில் மனிதர்களுக்கும் கூட உயிர்ச் சேதங்களை ஏற்படுத்துகின்றன.
இவற்றில் காட்டுப்பன்றிகளிடம் இருந்து விவசாய விளைபொருட்களையும் விவசாய நிலங்களையும் காப்பது பற்றி காண்போம்.
1. துணி வேலிகள்
பழைய நைலான் சேலைகள், வேட்டிகள் கொண்டு விவசாய நிலத்தைச் சுற்றிலும் வேலி போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தும் பொழுது இவற்றைத் தாண்டி வருவதில்லை. இரவு நேரங்களில் ஒளிர்வது போன்ற அமைப்பை ஏற்படுத்துவதால் விளைநிலங்களில் பன்றிகள் நுழைவதை தடுக்கலாம்.
2. CD, DVD வேலிகள்
தேவையற்ற CD, DVD க்கள் கொண்டு கம்பிபிகளின் மேல் வேலிகள் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம். இதனால் வேலியாக அமைவதுடன் இரவு நேரங்களில் விளக்கு ஒளிர்வதைப்போன்ற அமைப்பினை ஏற்படுத்தி பன்றிகள் பாதிப்பை தவிர்க்கலாம்.
3. காட்டுப்பன்றிகளின் மலம்
காட்டுப்பன்றிகளின் மலம் கிடைத்தால் நீரில் கரைத்து வேலியின் ஓரங்களில் தெளித்து விட வேண்டும். இந்த ஒவ்வாவை வாடையின் காரணமாக பன்றிகள் நிலங்களில் நூழைவது தவிர்க்கப்படும்.
4. தலைமுடி
சலூன் கடைகளில் கிடைக்கும் முடிகளை விவசாய நிலத்தின் ஓரத்திலோ அல்லது வேலிகளின் தரைப்பகுதிகளிலோ இடும் பொழுது வேலியின் இடையே நூழைய முற்படும் போது பன்றியின் மூக்குப்பகுதியில் நுண்ணிய அளவிலான முடிகள் ஒட்டியும் குத்தும் போது ஒருவிதமான அலர்ஜி ஏற்பட்டு உள்ளே நுழைவது தடுக்கப்படுகிறது.
5. கூர்மையான ரம்ப வேலிகள்
6. இரசாயன திரவங்கள்
காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்கு என்ற இரசாயன திரவங்கள் கடைகளிலும் ஆன்லைனிலும் கிடைக்கிறது. இவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.
7. சோலார் வேலிகள்
வேளாண் பொறியியல் துறை மூலம் மானிய விலையில் சூரிய ஒளியில் இயங்கும் மின்வெளிகள் அமைத்து தரப்படுகிறது. இத்துறையினை அணுகி இம்மின் வேலிகளை அமைக்கும்பொழுது காட்டுப்பன்றி, மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து நமது விவசாய நிலத்தை காக்கலாம்.